நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு: மத்திய கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு:  மத்திய கல்வித்துறை அமைச்சர் ஆய்வு
X
நாட்டில் 92% அதிகமான பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு மற்றும் ஆசிரியர்களின் தடுப்பூசி செலுத்திய நிலை குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கல்வித் துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கல்வி நிறுவனங்களில் இயல்பு நிலையும், துடிப்பான ஆர்வமும் இயல்பு நிலைக்கு திரும்புவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

தற்போது வரை பெரும்பாலான மாநிலங்கள் அனைத்து வகுப்புகளுக்குமான பள்ளிகளை ஏற்கனவே திறந்துள்ளன. 92% சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மத்திய அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் 96% அதிகமான ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!