பம்பையில் நீர்வரத்து குறைவு: சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி

பம்பையில் நீர்வரத்து குறைவு: சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி
X

பம்பை.

பம்பையில் நீர்வரத்து குறைந்து வருவதால் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல இன்று அனுமதிப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

கேரளாவின் காக்கி-ஆனத்தோடு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பம்பா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் நிலக்கல்லில் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வானிலை சாதகமாக மாறியவுடன் அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது பம்பையில் தண்ணீர் வடியத் தொடங்குகிறது. நிலக்கல்லில் காத்திருக்கும் பக்தர்கள் இன்று மதியம் சபரிமலை புனித மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இதனையடுத்து நீர்வரத்து குறைந்து வருவதால், 50 பேர் கொண்ட குழுக்களாக பம்பையில் இருந்து பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

Tags

Next Story
ai future project