உலகத் தரம் வாய்ந்த உயர்கல்விக்கு மத்திய அரசு ரூ.1000 கோடி நிதியுதவி

உலகத் தரம் வாய்ந்த உயர்கல்விக்கு மத்திய அரசு ரூ.1000 கோடி நிதியுதவி
X

கோப்பு படம்

உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைகழகங்களை உருவாக்க மத்திய அரசு ரூ.1000 கோடி நிதியுதவி -மத்திய கல்வித்துறை இணையமைச்சர்

உயர் சிறப்பு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.1000 கோடி (5 ஆண்டு காலத்திற்கு) நிதியுதவி வழங்கியிருப்பதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ள அவர், இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை வழங்கும் விதமாக, அரசு மற்றும் தனியார் சார்பில் தலா 10 கல்வி நிறுவனங்களை தொடங்கி அவற்றுக்கு உயர் சிறப்புக் கல்வி நிறுவனத் தகுதியை வழங்க 2017 ஆம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டதாக கூறியுள்ளார். இதுவரை, இது போன்ற 11 நிறுவனங்களை (அரசு சார்பில் 8, தனியார் சார்பில் 3) தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிறுவனங்களுக்கு கல்வி, நிர்வாகம் மற்றும் நிதி விவகாரங்களில் ஓரளவுக்கு தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுபாஷ் சர்கார் தெரிவித்தார்.

Tags

Next Story