பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ். டெங்கு நோயாளி மரணம்

பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ். டெங்கு நோயாளி மரணம்
X

பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது

உத்தரப்பிரதேசத்தில், ரத்த வங்கி ஒன்று டெங்கு நோயாளிக்கு பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸைக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

உத்தரப்பிரதேசத்தில் தற்போது மழை காரணமாக டெங்கு பாதிப்பு நிலவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலருக்கு ரத்தத்தின் பிளாஸ்மா தேவை அதிகரித்திருக்கிறது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சிலர், போலி ரத்த வங்கிகளை அமைத்து, பொதுமக்களை ஏமாற்றிவருகின்றனர்.

உத்திர பிரதேச மாநிலம் பிராய்க்ராஜில் பிரதீப் பாண்டே என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 14 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு 8 யூனிட் பிளேட்லெட்டுகள் தேவைப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பிரதீப்பின் குடும்பத்தினரால் 3 யூனிட் மட்டுமே சேகரிக்க முடிந்தது. அப்போது மருத்துவமனை உரிமையாளரின் மகனிடம் இது பற்றி கூறினால் உதவி கிடைக்கும் என சிலர் தங்களிடம் கூறியதாக பிரதீப்பின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உரிமையாளர் மகனை தொடர்புகொண்டு 25,000 ரூபாய் பணம் கொடுத்து தேவைப்பட்ட பிளேட்லெட்டுகள் எங்களுக்கு கிடைத்தது. ஆனால், அதை பிரதீப்புக்கு செலுத்திய பிறகு அவரது நிலை இன்னும் மோசமானது. இதனால் பிரதீப்பை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால், அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் பிரதீப்புக்கு ரத்தம் உறைந்துவிட்டதாகவும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் என்று கூறினார்

அதன் பின்னர் தான் பிரதீப்புக்கு பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் வழங்கப்பட்டதாக தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரதீப்பின் உறவினர்கள், அவரது இறப்புக்கு காரணமாக இருந்த மருத்துவமனை மீது புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு விசாரண மேற்கொள்ளப்பட்டு வருகிறது

ரத்தத்தின் பிளாஸ்மாவும், சாத்துக்குடி ஜூஸும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், ரத்த வங்கியில் இருப்பவர்கள் இது போன்ற ஏமாற்று வேலையைச் செய்திருக்கிறார்கள்.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாகப் பேசிய போலீஸ் அதிகாரி, ``பிரதீப் பாண்டே என்ற டெங்கு நோயாளி முறையான சிகிச்சை அளிக்காததால், இறந்திருக்கிறார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அலகாபாத் பகுதியிலுள்ள ரத்த வங்கியில் பிளாஸ்மா வாங்கப்பட்டிருக்கிறது. பின்னர்தான் அது போலி ரத்த வங்கி என்பது தெரியவந்தது. பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்றார்.

மேலும், இது குறித்து உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர் ப்ரஜேஷ் பதக் கூறுகையில் `டெங்கு நோயாளிக்கு போலி பிளாஸ்மா விநியோகித்தது குறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குற்றம் நடந்திருப்பது கண்டறியப்பட்டால் குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil