டெல்லி கொலை வழக்கு: வருத்தமே இல்லை.. புறக்கணித்ததால் கொன்றேன்..ஒப்புக்கொண்ட காதலன்

டெல்லி கொலை வழக்கு: வருத்தமே இல்லை.. புறக்கணித்ததால் கொன்றேன்..ஒப்புக்கொண்ட காதலன்
X

சிறுமியை தாக்கும் இளைஞன்.

Shahbad Dairy murder - டெல்லி சிறுமி கொலை சம்பவத்தில், என்னை புறக்கணித்ததால் கொலை செய்தேன் என குற்றவாளி தெரிவித்துள்ளான்.

Shahbad Dairy murder - டெல்லியின் வடக்கு பகுதியில் தெரு ஒன்றில் சிறுமி ஒருவரை 20 வயது இளைஞர் ஒருவர் கடும் தாக்குதல் நடத்தி, கல்லால் நசுக்கி கொன்றது சமூகவலைத்தளங்களில் வீடியோ வைரலாகப் பரவியது. இது நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் 16 வயது சிறுமியை 22 முறை குத்தப்பட்டு, கல்லால் நசுக்கப்படும் காட்சி வெளியாகியுள்ளது. பொதுமக்கள் நடமாடும்போது இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

Delhi teen murder, Delhi Teen Stabbed To Death

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த அதிர்ச்சிக் கொலை சம்பவத்தில் உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நேற்று ஏசி ரிப்பேர் செய்யும் சாஹில் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். சிறுமியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 20 வயது இளைஞன், ஆத்திரத்தில் குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டார், மேலும் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

Delhi Murder,shahbad dairy girl murder

சாஹிலிடம் நடத்திய விசாரணையில், சாஹல் அந்த இளம்பெண்ணுடன் மூன்று ஆண்டுகளாக டேட்டிங் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சமீபத்தில், அவர் உறவை முறித்துக் கொண்டார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

delhi teen murder news

மேலும் சிறிது காலமாக சிறுமி தன்னை புறக்கணித்ததால் தான் கோபமடைந்து, குடிபோதையில் இருந்தபோது, நண்பரின் மகன் பிறந்தநாள் விழாவிற்குச் சென்று கொண்டிருந்தபோது சிறுமியை பக்கத்தில் உள்ள சுவற்றில் அணைத்து 22 முறை குத்தியுள்ளார். பின்னர் கல்லால் அவரை நசுக்கி கொலை செய்துள்ளார்.

Shahbad Dairy Murder Case, Shahbad Dairy Police station

சுமார் 25 நிமிடம் அந்த சிறுமி தெருவிலேயே கிடந்துள்ளார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடலில் 34 காயங்கள் இருந்ததாகவும், மண்டை உடைந்துள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சாஹில் அவரது அத்தை வீட்டில் பதுங்கியிருந்தபோது போலீசார் கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!