ஆ.ராசா, கனிமொழிக்கு புதிய சிக்கல்? 2ஜி வழக்கில் மேல்முறையீடு ஏற்பு

ஆ.ராசா, கனிமொழிக்கு புதிய சிக்கல்? 2ஜி வழக்கில் மேல்முறையீடு ஏற்பு
X
2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த போது மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் ஆ.ராசா. அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதாவது பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது.

இதன் மூலம் 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக ஆ. ராாச மீது மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது. இதன் அடிப்படையில்தான் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்னர். பின்னர் அனைவருமே ஜாமீனில் விடுதலையாகினர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் இல்லை என 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனியின் இந்த தீர்ப்புக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்டவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து டெல்லி ஹைகோர்ட் இன்று தீர்ப்பளிக்க கூடியது. அப்போது 2ஜி வழக்கு தொடர்பான சிபிஐயின் மேல்முறையீட்டு மனுக்களை ஏற்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அது போல் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மே மாதம் முதல் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், 2-ஜி வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுவது பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு மிகவும் முக்கியமானது. இது திமுகவுக்கு மிக பெரிய பிரச்சினையையும் அவப்பெயரையும் கொடுத்தது. திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இப்படியாக உணர்வுபூர்வமான சாங்கடங்களையும் திமுகவுக்கு இந்த 2ஜி கொடுத்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!