ஒலிம்பிக் மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீது கொலைவழக்கு பதிவு
இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார்(37) ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவர். முன்னாள் ஜூனியர் சாம்பியன் மல்யுத்த வீரர் சாகர் தங்கர் கொல்லப்பட்டது தொடர்பாக ஒலிம்பிக் மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீது டெல்லி நீதிமன்றம் புதன்கிழமை கொலைக் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர் .
கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சிவாஜி ஆனந்த், குமார் மற்றும் 17 பேர் மீது ஐபிசியின் பிற பிரிவுகளில் கொலைக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குற்றச்சாட்டு குறித்த விரிவான உத்தரவு இன்னும் வரவில்லை
அக்டோபர் 1 ஆம் தேதி இந்த வழக்கில் சுஷில் குமார் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறி , குற்றச்சாட்டுகள் மீதான வாதங்களை அரசுத் தரப்பு வைத்தது .
குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் மீது இபிகோ பிரிவுகள் 302 (கொலைக்கான தண்டனை), 307 (கொலை செய்ய முயற்சி), 147 (கலவரத்திற்கான தண்டனை), மற்றும் 120 (B) குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 155 சாட்சிகள் உள்ளனர்.
மே 4 அன்று, 97 கிலோ எடையுள்ள கிரேக்க-ரோமன் பிரிவில் போட்டியிட்ட சாகர் தங்கர், இரு கோஷ்டிகளுக்கு இடையேயான மோதலில் அடித்துக் கொல்லப்பட்டார். சாகர் தங்கர் முன்னாள் ஜூனியர் தேசிய சாம்பியன் மற்றும் மூத்த தேசிய முகாமின் ஒரு பகுதியாக இருந்தார்.
ஒலிம்பிக் போட்டிகளில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் (வயது 38). இவர், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தங்கர் (வயது 23) என்பவருடன் டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் கடந்த மே மாதம் 4ந்தேதி மோதலில் ஈடுபட்டு உள்ளார். இதில், சாகர் மற்றும் அவருடைய நண்பர்களை, சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
பின்னர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டனர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்து கிடந்த சாகர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஆனால், சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக சாகர் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
சம்பவத்தின் வீடியோ வெளிவந்தபோது சுஷில் அதில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட நிலையில் அவரது பெயர் இந்த வழக்கில் அடிபட்டது. தலைமறைவாக இருந்த அவருக்கு எதிராக நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார் .
டெல்லி மற்றும் ஹரியானாவில் இருந்து தனது கூட்டாளிகளை துப்பாக்கியுடன் வரவழைத்து, மைதானத்தை தேர்வு செய்து, சுஷில் இந்த சதித்திட்டத்தை தீட்டியதாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu