கடற்பறவை திட்டத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைக்கும் பாதுகாப்பு அமைச்சர்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
கடற்பறவை திட்டத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை பாதுகாப்பு அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
கர்நாடக மாநிலம், கார்வாரில் உள்ள கடற்படை தளத்தில் 2 பெரிய கப்பல் துறைகள், கடற்படை அதிகாரிகளுக்கான 320 வீடுகள், 149 பாதுகாப்பு சிவிலியன் பணியாளர்கள் ஆகியோருக்கான தங்கும் விடுதிகள் அடங்கிய 7 குடியிருப்பு வளாகங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மார்ச் 5-ம் தேதி திறந்து வைக்கிறார்.
கடற்பறவைத் திட்டத்தின் முதல் கட்டம் 10 கப்பல்களுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு 2011-ல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. உள்கட்டமைப்பில் தடுப்புச் சுவர், 10 கப்பல்களை நிறுத்தும் திறன் கொண்ட ஒரு கப்பல், 10,000 டன் கப்பல் லிப்ட் மற்றும் உலர் பெர்த், ஒரு கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் யார்டு, தளவாடங்கள் மற்றும் ஆயுத சேமிப்பு வசதிகள், 1000 பணியாளர்களுக்கான தங்குமிடம், ஒரு தலைமையகம் / கிடங்கு அமைப்பு மற்றும் 141 படுக்கைகள் கொண்ட கடற்படை மருத்துவமனை ஆகியவை அடங்கும்.
32 கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், 23 யார்டு கிராஃப்ட் கப்பல்களைக் கொண்ட IIA திட்டத்துக்கு பாதுகாப்பு குறித்த அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் இந்திய பசுமை கட்டட கவுன்சில் ஆகியவற்றால் வகுக்கப்பட்ட தற்போதைய வழிகாட்டுதல்களுக்கு இணங்க கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் இத்திட்டத்தில் கட்டப்படுகின்றன.
இரண்டாம் கட்டத்தில், அதிகாரிகள், முதுநிலை மற்றும் இளநிலை மாலுமிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான அனைத்து வகையான குடியிருப்புகளுடன், குடியிருப்புகளை உள்ளடக்கிய நான்கு வெவ்வேறு நகரங்களியங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 2700 மீட்டர் ஓடுபாதை மற்றும் பொதுமக்கள் உறைவிடத்துடன் கூடிய பசுமை கள இரட்டை பயன்பாட்டு கடற்படை விமான நிலையம் அமைப்பது, பல்வேறு கப்பல்களில் ஏறும் விமானங்களுக்கு விமான ஆதரவு மற்றும் வணிக விமானங்களின் செயல்பாடுகளை எளிதாக்கும்.
பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பிஇஎம்எல் நிறுவனம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (பிஇஎல்) மற்றும் மிஸ்ரா தாது நிகாம் நிறுவனம் (மிதானி) ஆகியவற்றுடன் பாதுகாப்பு அமைச்சகம் கனரக பயன்பாட்டு என்ஜின்களுக்கான மேம்பட்ட எரிபொருள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்காக முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், பி.இ.எம்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு சாந்தனு ராய்; மிதானி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ்.கே.ஜா; பெல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு பானு பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் 2024 மார்ச் 04, அன்று புதுதில்லியில் பாதுகாப்புத்துறைச் செயலாளர் திரு கிரிதர் அரமனே முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
இந்தக் கூட்டு முயற்சி மேம்பட்ட செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை வழங்கும். மேம்பட்ட எரிபொருள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை வடிவமைத்தல், சோதனை செய்தல், உற்பத்தி செய்ய உள்நாட்டு திறன்களை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்தும். என்ஜின் தொழில்நுட்பம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளில் சமீபத்திய முன்னேற்றங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நிறுவனங்கள் போர் வாகனங்கள் துறையில் தன்னம்பிக்கையை உறுதி செய்யும். 'தற்சார்பு இந்தியா' முன்முயற்சியின் கீழ் நாட்டிற்குள் முக்கியமான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான அரசின் தீர்மானத்தை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது.
2024-ம் ஆண்டின் முதலாவது கடற்படை கமாண்டர்கள் கருத்தரங்கு
2024ம் ஆண்டின் கடற்படை கமாண்டர்கள் கருத்தரங்கின் முதலாவது பதிப்பு நாளை தொடங்குகிறது. இந்தக் கருத்தரங்கின் முதல் கட்ட நிகழ்வு கடற்பகுதியில் நடைபெறுகிறது. கடற்படை விமானந்தாங்கி கப்பல்களில் மேற்கொள்ளப்படும் சாகசகங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிடுகிறார்.
ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த கடற்படை கருத்தரங்கில் கடற்பகுதி பாதுகாப்பில் மேற்கொள்ளப்படும் உத்திகள், செயல்முறைகள், நிர்வாக விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கடற்படைப் பாதுகாப்பில் பிராந்திய அளவில் நிலவும் தற்போதைய சூழல்கள், சவால்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. கடற்படையின் எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்கான முக்கிய முடிவுகளும் இந்த கருத்தரங்கில் மேற்கொள்ளப்பட உள்ளன.
மூன்றுநாள் கருத்தரங்கில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடற்படை கமாண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். கடற்படை, விமானப் படைகளின் தளபதிகள், முப்படைகளின் தலைவர் ஆகியோரும் கடற்படை கமாண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளனர். பொதுவான தேச பாதுகாப்பு சூழல் குறித்து முப்படைகளிடையே ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கமாண்டர்கள் கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது. தேசத்தின் பாதுகாப்புக்காக படைகளின் தயார் நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
கடந்த ஆறுமாதங்களாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதலால் இந்தோ-பசிபிக் பிராந்தியம் புவியல், அரசியல் ரீதியிலான முக்கியமான மாற்றங்களைக் கொண்டிருந்தது. வணிகக் கப்பல்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களும் நடைபெற்றன. இந்தப் பிராந்தியத்தில் முதன்மையான பாதுகாப்பு பங்கெடுப்பாளர் என்ற கடமையைக் கருத்தில் கொண்டு இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக முதலாவதாக இந்தியக் கடற்படை பதிலடி கொடுத்துள்ளது.
இந்த நிலையில் இந்தியக் கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் மேற்கொள்வதில் கமாண்டர்கள் கருத்தரங்கு நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. தெளிவான உத்தி, செயலாக்கத்திறன், புதுமையான தொழில்நுட்பம், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றில் முன்னெடுக்கப்பட வேண்டிய விஷயங்களைக் கடற்படையின் கடமைகளை கடற்படை கமாண்டர்கள் கருத்தரங்கு மீண்டும் வலியுறுத்தும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu