சரக்கு ரயிலை தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு

சரக்கு ரயிலை தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு
X

மாதிரி படம் 

சென்னை கவுஹாத்தி இடையே சரக்கு ரயிலை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை ராயபுரம் -அசாம் மாநிலம் கவுஹாத்தி இடையே இயக்கப்படும் சரக்கு ரயிலை, ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்குவதன் மூலம் அதிக வருவாய் ஈட்ட தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதற்காக, ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டு தனியார் நிறுவனங்களிடம் சரக்கு போக்குவரத்துக்கு சரக்கு ரயில்களை பயன்படுத்திக் கொள்ளும்படி வலியுறுத்தி வருகிறது. பிரபல கார் நிறுவனங்கள், விவசாய கருவிகள், உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவை சரக்கு ரயில்களை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி, சென்னையிலிருந்து கவுஹாத்திக்கு எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலை, ஆறு ஆண்டுகளுக்கு தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள், தெற்கு ரயில்வே தலைமை அலுவலக சரக்கு போக்குவரத்து தலைமை வணிக பிரிவில் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி