பிரேசிலில் நடைபெறும் டெப்லிம்பிக்ஸ் 2021-ல் பங்கேற்கும் தடகள வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

பிரேசிலில் நடைபெறும் டெப்லிம்பிக்ஸ் 2021-ல் பங்கேற்கும் தடகள வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
X
பிரேசிலில் நடைபெறும் டெப்லிம்பிக்ஸ் 2021-ல் பங்கேற்கும் திறமை மிக்க தடகள வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

பிரேசிலில் நேற்று துவங்கிய செவித்திறன் அற்றோருக்கான 2021 டெப்லிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் திறமை மிக்க தடகள வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விளையாட்டுப் போட்டிகளுக்கு புறப்படுவதற்கு முன்பு, தேசிய போர் நினைவுச் சின்னத்திற்கு அவர்கள் சென்று பார்வையிட்டது உண்மையிலேயே தம்மை நெகிழச் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

பிரதமர் தமது சுட்டுரை செய்தியில் கூறியிருப்பதாவது;

"இன்று தொடங்கும் #Deaflympics2021 -ல் இந்தியா நமது குழுவை உற்சாகப்படுத்துகிறது. நமது திறமையான விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். விளையாட்டு போட்டிக்கு புறப்படுவதற்கு முன் தேசிய போர் நினைவகத்தைப் பார்வையிட்ட அவர்களின் செயல் என்னை மிகவும் கவர்ந்தது." என்று தெரிவித்தார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்