சர்வதேச செயல்திட்டங்களை வடிவமைப்பதில் இந்தியா ஆதிக்கம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

சர்வதேச செயல்திட்டங்களை வடிவமைப்பதில் இந்தியா ஆதிக்கம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
X
டிடி நியூஸ் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி ‘இந்தியா முதலில்’ வெளியுறவுக் கொள்கை - விஸ்வகுருவாக மாற்றுதல் குறித்து விவாதம்.

இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 7 அத்தியாயங்களாக நடைபெற்ற டிடி நியூஸ் மாநாட்டில், தலைசிறந்த பிரமுகர்கள், கொள்கை வகுப்போர் மற்றும் சம்மந்தப்பட்ட துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் இளைஞர் சக்தி, சமூதாய அதிகாரம் அளித்தல், வாழ்க்கையை எளிதாக்குதல், புதிய இந்தியாவிற்கு மெருகூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விரிவான விவாதம் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவாக, 'இந்தியா முதலில்' வெளியுறவுக்கொள்கை – விஸ்வகுருவாக மாற்றுதல் என்ற தலைப்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கருடன் நேரடி கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில், திறமை (capability) நம்பகத்தன்மை (Credibility) மற்றும் சூழல் (Context) ஆகிய 3C-க்களை மாற்றியமைப்பதாக இருக்கும் என்றார்.

திறமையில் இந்தியாவின் எழுச்சி, கோவிட்-19 காலகட்டத்தில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் பொருளாதார எழுச்சி, தற்போது பிபிபி (PPP) அடிப்படையில் மூன்றாவது பெரிய நாடாக திகழும் அளவிற்கு உள்ளது என்று குறிப்பிட்ட அவர், சர்வதேச செயல்திட்டங்களை வடிவமைப்பதில் இந்தியா ஆதிக்கம் செலுத்திவருவதாகவும் கூறினார். உலகளாவிய மனிதநேய நெருக்கடி ஏற்படும் காலங்களில், 'முதலில் குரல் கொடுக்கும்' நாடாக இந்தியா திகழ்வது போன்றவற்றின் மூலம், இந்தியாவின் திறமையை உலகம் எவ்வாறு பார்க்கிறது என்பதை உணர்த்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!