கனமழைக்கு பல்லிளித்த பண்டேல்கண்ட் விரைவுச்சாலை

கனமழைக்கு பல்லிளித்த பண்டேல்கண்ட் விரைவுச்சாலை
X

சேதமடைந்த பண்டேல்கண்ட் விரைவுச்சாலை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது

ஜூலை 16 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட விரைவு சாலை ஒரு வாரத்திற்குள் சேதமடைந்துள்ளது

ஜூலை 16 அன்றுபிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட 296 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலையானது, சித்ரகூடில் உள்ள பாரத்கூப் மற்றும் எட்டாவாவில் உள்ள குத்ரேலுடன் ஏழு மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது. நான்கு வழி விரைவுச் சாலை பின்னர் ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

பிப்ரவரி 29, 2020 அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 28 மாதங்களில் இந்த விரைவு நெடுஞ்சாலை கட்டப்பட்டது.

சேலம்பூர் அருகே சிரியா என்ற இடத்தில் கனமழை காரணமாக சாலை சேதமடைந்ததால், நேற்றிரவு இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. மேலும், அவுரியாவில் உள்ள அஜித்மாலுக்கு அருகில் பெரிய பள்ளம் ஒன்று காணப்பட்டது. விரைவுச் சாலையின் சேதமடைந்த பகுதியில் ஜேசிபி உதவியுடன் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.


சமாஜ்வாடி கட்சி தனது ட்விட்டரில், முழுமையடையாத பந்தல்கண்ட் விரைவுச் சாலையை மழை அம்பலப்படுத்தியதாக ட்வீட் செய்துள்ளார். பாஜக மக்களை தவறாக வழிநடத்துவதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இரட்டை என்ஜின் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் ஒரு வாரம் கூட நீடிக்காது என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது

இந்த சாலை பண்டேல்கண்ட் பகுதியை ஆக்ரா-லக்னோ மற்றும் யமுனா விரைவுச்சாலைகளுடன் வேகமான மற்றும் சுமூகமான போக்குவரத்துடன் இணையும். சித்ரகூட் மாவட்டத்தில் பாரத்கூப் அருகே உள்ள கோண்டா கிராமத்தில் NH-35 இலிருந்து எட்டாவா மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு அருகில் இந்த விரைவுச் சாலை நீண்டுள்ளது. அங்கு, ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையுடன் இணைகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!