மும்பை - அகமதாபாத் அதிவேக ரயில்பாதை கட்டுமான பணிகளை தர்சனா ஜர்தோஸ் பார்வையிட்டார்

X
கோப்பு படம்
By - V.Nagarajan, News Editor |17 Feb 2022 8:51 PM IST
மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில்பாதை கட்டுமானத்தில் சூரத் – வாப்பி இடையேயான பணிகளை தர்சனா ஜர்தோஸ் பார்வையிட்டார்
மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில்பாதை கட்டுமானத்தில் சூரத் – வாப்பி இடையேயான பணிகளை ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷணா ஜர்தோஷ் பார்வையிட்டார். நவ்சாரி மாவட்டம் பட்கா கிராமத்திலிருந்து ஆய்வுப் பயணத்தை அமைச்சர் தொடங்கினார். இந்த ஆய்வின் இறுதியில் டாமன் கங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலப்பணிகள் நடைபெறும் இடத்தை அவர் பார்வையிட்டார். மொத்தம் 352 கிமீ தூரத்திற்கான இந்த ரயில் பாதையில் குஜராத் மாநிலம் 100 சதவீத கட்டுமான ஒப்பந்தப் புள்ளிகளை இந்திய ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கியுள்ளது. இதற்கு 98.6 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் மகாராஷ்ட்ராவில் 62 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu