147 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது

147 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
X
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 ஆயிரத்து 204 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 28 ஆயிரத்து 204 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,19,98,158 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 373 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,28,682 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 41,511 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,11,80,968 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.45 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,88,508 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 51 கோடியே 45 லட்சத்து 268 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story