டாடா குழும முன்னாள் தலைவர் கார் விபத்தில் உயிரிழப்பு

டாடா குழும முன்னாள் தலைவர் கார் விபத்தில் உயிரிழப்பு
X
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி மும்பை அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சைரஸ் மிஸ்திரி காரில் மும்பை திரும்பிக் கொண்டிருந்தார். பல்ஹர் பகுதியில் பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது டிவைடரில் கார் மோதியதில் காரில் இருந்த 4 பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . இருவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிரைவர் கார் கட்டுப்பாட்டை இழந்ததால், விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சைரஸ் மிஸ்திரி உடல், அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை அறிக்கை பதிவு செய்ய உள்ளனர்.

சைரஸ் மிஸ்திரி மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மஹாராஷ்டிர மாநில முதல்வர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சைரஸ் மிஸ்திரி 2012-ல் இருந்து 2016வரை டாடா குழுமத்தின் தலைவராக பணியாற்றி உள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!