ஒரு குடும்பம், ஒரு பதவி: காங்கிரஸ் காரிய கமிட்டி ஒப்புதல்
சோனியா காந்தி
மூன்று நாட்கள் தீவிர விவாதங்களுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒரு குடும்பம், ஒரு பதவி போன்ற அமைப்பு சீர்திருத்தங்களுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
50 வயதுக்கு குறைவானவர்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் மற்றும் அனைத்து நிலைகளிலும் பதவிகளை வகிப்பவர்களுக்கு ஐந்தாண்டு கால வரம்பு போன்ற சீர்திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. .
உதய்பூர் நவ் சங்கல்ப் ஷிவிர் பிரகடனம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது . ஒரு குடும்பம், ஒரு பதவி என்ற விதியின் படி, தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் தலைவர்களின் மகன்கள், மகள்கள் மற்றும் பிற உறவினர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் கட்சிக்காக உழைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும்.
கொள்கை விவகாரங்களில் முடிவெடுப்பதில் காங்கிரஸ் தலைவருக்கு உதவ, அமைப்பினுள் இருந்து ஒரு சிறிய அரசியல் ஆலோசனைக் குழுவை அமைக்கும் திட்டத்திற்கும் காரிய கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், நாடாளுமன்ற கமிட்டியை புனரமைப்பதற்கான முன்மொழிவை நிராகரித்த காரிய கமிட்டி, மாறாக, காங்கிரஸ் தலைவருக்கு முடிவுகளை எடுப்பதற்கு உதவ, காரிய கமிட்டியில் ஒரு சிறிய குழு அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல், அனைத்து மாநிலங்களிலும் அரசியல் விவகாரக் குழு அமைக்கப்படும். தலைவர்களுக்கு பயிற்சி அளிக்க தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் என்றும், கட்சியின் தகவல் தொடர்பு அமைப்பு புதுப்பிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நிர்வாகத்துக்காக சிறப்பு அமைப்பும் அமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu