பைப் லைனில் தண்ணீராய் பாய்ந்த கரன்சி வெள்ளம்
குழாயிலிருந்து தண்ணீராய் கொட்டும் பணம்
பணத்தை தண்ணீராய் செலவழிக்கிறார் என கூற கேட்டிருப்போம். ஆனால், கர்நாடகாவில் பைப் லைனில் பணம் கொட்டியதை கண்டு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை அதிர்ச்சியடைந்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 15 அதிகாரிகள் மீது 8 எஸ்பிக்கள், 100 அதிகாரிகள், 300 பேர் கொண்ட குழு மூலம் 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மங்களூரை சேர்ந்த நிர்வாக பொறியாளர் கே.எஸ்.லிங்ககவுடா, மாண்டியாவை சேர்ந்த நிர்வாக பொறியாளர் ஸ்ரீனிவாஸ்.கே., தொட்பல்லாபூர் வருவாய் ஆய்வாளர் லட்சுமிநரசிமையா, பெங்களூரு முன்னாள் திட்ட மேலாளர் வாசுதேவ், பெங்களூரு பொது மேலாளர் பி.கிருஷ்ணாரெட்டி, இணை இயக்குனர் டி.எஸ்.ருத்ரேஷப்பா. கடக்கைச் சேர்ந்த 15 அதிகாரிகளுக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
25 லட்சத்தை பிளாஸ்டிக் பைப் லைனில் மறைத்து வைத்திருந்த ஜூனியர் இன்ஜினியர் எஸ்.எம்.பிராதாரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். குழாயை திறந்த போது தண்ணீர் போல பணம் கொட்டியதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu