மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

இந்தியாவில் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஆண்டை தற்போது வேகமாக பரவவருகிறது. இந்தியாவில் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், நாளை இரவு 8 மணி முதல் மே 1 காலை 7 மணிவரை அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து அலுவலகங்களும் நாளை முதல் 15 நாட்கள் மூடப்படும். அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல் பங்க், மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு முழு முடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மிகவும் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். போக்குவரத்தை பொருத்தவரையில் ரயில், பேருந்து சேவை தொடரும். அந்த சேவைகளை அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும்." இந்திய விமானப்படையின் உதவி தேவை என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu