நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஜெயில்: உச்சநீதிமன்றம் உத்தரவு
நவ்ஜோத்சிங் சித்து
டிசம்பர் 27, 1988 அன்று, பாட்டியாலாவில் வசிக்கும் குர்னாம் சிங்குடன், வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக சித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சித்து மற்றும் அவரது நண்பர் ருபிந்தர் சிங் சந்து, குர்னாம் சிங்கை அவரது காரில் இருந்து வெளியே இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1999 ஆம் ஆண்டில், பாட்டியாலாவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் சித்துவை ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுவித்தது. மேலும் சந்தேகத்தின் பலனை அவருக்கு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு சித்துவை கொலை வழக்கில் குற்றவாளி என அறிவித்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அரியானா உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையில் சித்துவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சித்து உச்சநீதிமன்றத்தில் நவ்ஜோத் சிங் சித்து மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பில், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu