இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது-மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது-மத்திய சுகாதாரத்துறை தகவல்
X

இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 94.55% ஆக உயர்வு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு விகிதம் 4.66 சதவிகிதமாக குறைந்துள்ளது. மேலும் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதமும் 94.55 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதம் ஏறுமுகத்தில் இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே தொற்று குறைந்து வருகிறது. அதன்படி இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கு குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 92,596 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேசிய அளவில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது.

அதன்படி இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 4.66 சதவிகிதமாக குறைந்துள்ளது. மேலும் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 94.55 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த தகவல் நாட்டு மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் சுமார் 57 நாட்களுக்கு பின்பு தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது (12,31,415) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மாநில/யூனியன் பிரதேசங்களுக்கு தடுப்பூசி வழங்கிய விவரம் குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி மத்திய அரசு இதுவரை அனைத்து மாநில/ யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக 25,06,41,440 தடுப்பூசிகள் வழங்கியுள்ளது என்றும் அதில் இதுவரை 23,74,21,808 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தது. மேலும் தற்போது மாநில/யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 1,33,68,727 தடுப்பூசிகள் இருப்பதாகவும் விரைவில் மாநிலங்களுக்கு 3,81,750 தடுப்பூசிகள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!