மூன்று மாநில தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தொடங்கியது
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
திரிபுராவில் தற்போது பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடக்கிறது.
நாகாலாந்தில் என்.டி.பி.பி. ஆட்சி நடக்கிறது.
மூன்று மாநில சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.
Live Updates
- 2 March 2023 8:51 AM IST
நாகாலாந்தில் பாஜக-என்டிபிபி கூட்டணி வலுவான முன்னிலையில் உள்ளது .பாஜக-என்டிபிபி கூட்டணி 60 இடங்களில் 35 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
- 2 March 2023 8:42 AM IST
60 இடங்களைக் கொண்ட திரிபுரா சட்டமன்றத்தில், பாஜக 35 இடங்களில் முன்னணி பெற்று பாதியை தாண்டியுள்ளது மற்றும் மாநில கட்சியான திப்ரா மோதா ஐந்து இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
முதன்முறையாக, இடதுசாரி முன்னணி தனது பழைய எதிரியான காங்கிரஸுடன் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. ஆரம்ப நிலைகளின்படி, இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி நான்கு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
- 2 March 2023 8:41 AM IST
நாகாலாந்தில் பாஜக-என்டிபிபி கூட்டணி 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.
- 2 March 2023 8:24 AM IST
திரிபுராவில் பாஜக கூட்டணி 35 இடங்களில் முன்னிலை காங் கூட்டணி 4 இடங்களில் முன்னிலை
மேகாலயாவில் காங் 1 இடத்திலும், என்பிபி கட்சி 8 இடங்களிலும் பாஜக 2 இடத்திலும் முன்னிலை,
நாகாலாந்தில் பாஜக கூட்டணி 16 இடங்களில் முன்னிலை,
- 2 March 2023 8:20 AM IST
மேகாலயா
மேகாலயாவில் காங் 1 இடத்திலும், என்பிபி கட்சி 7 இடங்களிலும் பாஜக 2 இடத்திலும் முன்னிலை,
- 2 March 2023 8:18 AM IST
திரிபுரா
திரிபுராவில் பாஜக 31 இடங்களில் முன்னிலை
காங் கூட்டணி 2 இடங்களில் முன்னிலை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu