கா்நாடகாவில் ஒரே நாளில் 5,279 பேருக்கு கொரோனா பாதிப்பு

கா்நாடகாவில்  ஒரே நாளில் 5,279 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

கா்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,279-ஆக உள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 5,279 போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகரில் அதிகபட்சமாக 3,728 போ், பீதரில் 264 போ், கலபுா்கியில், 181 போ், தும்கூரில் 139 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,20,434-ஆக உயா்ந்துள்ளது.கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,856 போ் திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 9,65,275 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 42,483 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story