இது வரை போடப்பட்ட கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10.45 கோடியைக் கடந்தது

இது வரை போடப்பட்ட கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10.45 கோடியைக் கடந்தது
X

இன்று தடுப்பூசித் திருவிழாவின் 2வது நாள் நாடு முழுவதும் நடக்கிறது. நாட்டில் இது வரை போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10.45 கோடியைக் கடந்தது.

இன்று காலை 7 மணி வரை, மொத்தம் 10,45,28,565 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசித் திருவிழாவில் முதல்நாளான நேற்று சுமார் 30 லட்சம் (29,33,418 ) தடுப்பூசிகள் போடப்பட்டன. தினசரி போடப்படும் தடுப்பூசிகள் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இவற்றின் தினசரி சராசரி 40,55,055 டோஸ்களாக உள்ளன.

நாட்டில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், 1,68,912 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 83.02 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, சட்டீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 63,294 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 16 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது. நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 12,01,009-ஐ எட்டியுள்ளது. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,21,56,529-ஆக உள்ளது. இவர்கள் எண்ணிக்கை 89.86 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 75,086 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கொவிட் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் இறந்துள்ளனர்.

Tags

Next Story
challenges in ai agriculture