இந்தியாவில் இறங்கு முகத்தில் கொரோனா தொற்று பரவல்

இந்தியாவில் இறங்கு முகத்தில் கொரோனா தொற்று பரவல்
X
இந்தியாவில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு 11,793 ஆக பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் . கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 11,739 பேருக்கும், நேற்று 17,073 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 18ஆயிரத்து 839 ஆக அதிகரித்துள்ளது.

Corona Updates: India Logs 11,793 Covid Cases, 27 Deaths In 24 Hoursகடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 9486 பேர் குணமடைந்தனர். கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,27,97,092 ஆக உயர்ந்துள்ளது.

96,700 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 27 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 5,25,047 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!