6 மாநிலங்களில் வேகமாக பரவும் கொரோனா

6 மாநிலங்களில் வேகமாக பரவும் கொரோனா
X

மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 48 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 80.63% பதிவாகியுள்ளது.

நேற்று வரை 53,476 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 31,855 பேரும், பஞ்சாபில் 2,613 பேரும், கேரளாவில் 2,456 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.இந்தியாவில் தற்போது 3.95 லட்சம் (3,95,192) பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 3.35 சதவீதமாகும்.

நேற்று காலை 7 மணி வரை, 8,61,292 முகாம்களில்‌ 5.31 கோடி (5,31,45,709) பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 79,80,849 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 50,61,790 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 84,78,478 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 2,37,381 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 51,31,949 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 2,32,55,262 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,31,650 ஆக (95.28%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 26,490 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் 251 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil