கேரளாவில் இன்று 10,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 120 பேர் உயிரிழப்பு

கேரளாவில் இன்று 10,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 120 பேர் உயிரிழப்பு
X

பைல் படம்.

கேரளாவில் இன்று 10,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று 10,944 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 645 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, 12 ஆயிரத்து 922 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 46,31,330 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றால் இன்று 120 பேர் உட்பட இதுவரை மொத்தம் 26,072 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!