சர்ச்சையை கிளப்பிய காளி ஆவணப்படத்துக்கு கனடாவிலும் நெருக்கடி..!

சர்ச்சையை கிளப்பிய காளி ஆவணப்படத்துக்கு கனடாவிலும் நெருக்கடி..!
X

உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குனர் லீனா மணிமேகலை -காளி ஆவணப்பட போஸ்டர்.

Latest Tamil Cinema News- காளி ஆவணப்படத்துக்கு கனடா இந்து தலைவர்கள் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த படத்தை திரும்ப பெறுமாறு, நிகழ்ச்சி அமைப்பாளர்களை இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Latest Tamil Cinema News- கனடா நாட்டில் வசிக்கும் ஆவணப்பட பெண் இயக்குனர் லீனா மணிமேகலை. இவர், காளி என்னும் ஆவணப்படத்தில் காளி அம்மனாக நடித்து, தானே, இயக்கி, தயாரித்து இருந்தார். கனடா நாட்டின் டொராண்டோ ஆகா கான் அருங்காட்சியகத்தில் பன்முக கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில் ரிதம்ஸ் ஆஃப் கனடா என்ற திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக காளி ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மகா காளி, சிகரெட் புகைப்பது போன்றும், ஒரு கையில் எல்.ஜி.பி.டி சமூகத்தின் கொடியை ஏந்தியபடியும் இருப்பதாக வெளியிடப்பட்டது. இந்த படம் உலக அளவில் வாழும் இந்துக்கள் இடையே பெரும் மன வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய காளி ஆவணப்படத்தை திரும்ப பெற வேண்டும் என ஒட்டாவா இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் ஆவணப்படத்தின் போஸ்டரில் இந்து கடவுளை அவமதித்ததாக கனடா நாட்டின் இந்து மத தலைவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளதாகவும், டொராண்டோ நகரத்தில் உள்ள தூதரகம் இதுகுறித்து நிகழ்வின் அமைப்பாளர்களுக்கு தகவல் கூறியுள்ளது எனவும், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சர்ச்சைக்குரிய அந்த திரைப்படம் சம்மந்தப்பட்ட அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் எனவும், கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இதனால் ஆவணப்படம் காளி இயக்குனர் லீனா மணிமேகலைக்கு நெருக்கடி மேலும் மேலும் முற்றி வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story