குடியரசுத் தலைவர் தலைமையில் நாளை அரசியலமைப்பு தின கொண்டாட்டம்

75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு நடைபெறும் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' விழாவைக் கொண்டாடும் வகையில் அரசியலமைப்பு தினத்தை நாளை அதாவது நவம்பர் 26ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படவுள்ளது. குடியரசுத் தலைவர் காலை 11 மணிக்கு இந்தக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைப்பார்.
குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மக்களவைத்தலைவர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் பிற பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி சன்சத் டிவி/டிடி மற்றும் ஆன்லைன் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
குடியரசுத் தலைவரின் உரைக்குப், பின் அரசியல் சாசனத்தின் முன்னுரையை அவருடன் நேரலையில் படிக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 'அரசியலமைப்பு ஜனநாயகம்' குறித்த இணையவழி வினாடிவினாவை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu