'ராஷ்டிரபத்னி' கருத்துக்காக குடியரசு தலைவரிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு
மக்களவையில் காங்கிரஸின் தலைவரான சவுத்ரி, பல பிரச்சனைகள் தொடர்பாக தனது கட்சியின் போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசும் போது "ராஷ்டிரபத்னி" என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதனை தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.
பழங்குடி சமூகத்திலிருந்து நாட்டின் முதல் குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள முர்முவுக்கு காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுதிய கடிதத்தில், "நீங்கள் வகிக்கும் பதவியை விவரிக்க தவறான வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது வாய்தவறி வந்த வார்த்தை என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், அதை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
ஆனால் இது வாய்தவறி வந்த வார்த்தையில்லை என பாஜக கூறியுள்ளது. "இது வாய்தவறி கூறியது அல்ல. நீங்கள் வீடியோ கிளிப்பைப் பார்த்தால், அதில் ரஞ்சன் சவுத்ரி இரண்டு முறை ராஷ்டிரபதி என்று தெளிவாக (குடியரசு தலைவர் முர்முவைக் குறிப்பிட்டு ) பின்னர் அவர் அவரை ராஷ்டிரபத்னி என்று அழைத்தார்," என்று சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். இதுபோன்ற விஷயங்களை இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால் சவுத்ரி கூறுகையில், தான் ஒரு பெங்காலி என்றும் இந்தி பேசத் தெரியாததால் வாய்தவறி கூறியதாகவும் கூறியதை , பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை
இது குறித்த சர்ச்சை வெடித்தபோது, பாஜகவிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று சவுத்ரி தெளிவுபடுத்தியிருந்தார், ஆனால் ஜனாதிபதி முர்முவை சந்தித்து தந்து கருத்துக்களால் அவர் காயப்பட்டதாக கூறினால் அவரிடம் "நூறு முறை" நேரடியாக மன்னிப்பு கேட்பேன் என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu