ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் கடந்த 26-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசில் இருந்து விலகிய அவர் ஜம்மு-காஷ்மீரில் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக வரும் 4-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஜம்முவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவாக ஜம்மு-காஷ்மீர் காங்கிரசை சேர்ந்த 64 தலைவர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளனர். ராஜினாமா செய்தவர்களில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் துணை முதல்-மந்திரி தாரா சந்தும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 64 பேர் ராஜினாமா செய்த சம்பவம் காங்கிரஸ் தலைமைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu