காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி  மருத்துவமனையில் அனுமதி
X

சோனியா காந்தி (பைல் படம்).

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் மிக நீண்டகாலம் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி. இவர் 1988 முதல் 2017ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைவராக இருந்தார். இதையடுத்து 2017ம் ஆண்டு ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானார். ஆனால் 2019ல் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையெடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக மீண்டும் சோனியா காந்தி செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இன்று திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai future project