முன்னணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை பெங்களுரு அழைத்து வர முடிவு

முன்னணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை பெங்களுரு அழைத்து வர முடிவு
X
தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் முன்னிலையில் உள்ள வேட்பாளர்களை பெங்களூருக்கு வருகை தர காங்கிரஸ் கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

காங்கிரஸ் முன்னிலை வேட்பாளர்களுக்கு அழைப்பு

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுவருகின்றனர். இதையடுத்து முன்னிலையில் உள்ள வேட்பாளர்களை பெங்களூருக்கு வருகை தர கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. நாளை நண்பகல் 12 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் நாளை பெங்களூரு வருமாறு கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சிம்லாவில் உள்ள ஜக்கு கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார்

கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால், காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனும் மஜத முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஹெச்.டி.ரேவண்ணா முன்னிலை வகிக்கிறார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வரும், மஜத தலைவருமான குமாரசாமி பெங்களூருவில் உள்ள கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

காங். 100 இடங்களில் முன்னிலை பாஜக 68 இடங்களில் முன்னிலை மஜத 24 இடங்களில் முன்னிலை: தேர்தல் ஆணையம்

காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது. மறுபுறம், தற்போதைய பாஜக வெற்றிபெற போராடி, 77 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக அமைச்சர்கள் 8 பேர் அந்தந்த தொகுதிகளில் பின்தங்கியுள்ளனர் . ஜனதா தளம் (எஸ்) 25 இடங்களில் முன்னிலை வகித்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!