மேகாலயா மாநில பா.ஜ.க. கூட்டணியில் காங்கிரஸ்

மேகாலயா மாநில பா.ஜ.க. கூட்டணியில் காங்கிரஸ்
X

பாஜக அங்கம் வகிக்கும் மேகாலயா ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்த காங்கிரஸ் 

மேகாலயாவில் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான மேகாலயா ஜனநாயக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது

மேகாலயாவில் 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 21 தொகுதிகளை வென்றது, ஆனால் அதன் தொகுதி எண்ணிக்கை 17 ஆகக் குறைந்தது. அவர்களில் 12 எம்எல்ஏக்கள் நவம்பர் 2021ல் திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தனர்.

மீதமுள்ள 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வர் கான்ராட் கே.சங்மாவை சந்தித்து முறைப்படி கூட்டணி அரசில் இணைவதற்கான கடிதம் அளித்தனர். துணை முதல்வர் பிரஸ்டோன் டைன்சாங் முன்னிலையில் எம்எல்ஏக்களை கூட்டணிக்கு முதல்வர் வரவேற்றார்.

12 எம்எல்ஏக்களை இழந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு, பாஜக அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான மேகாலயா ஜனநாயகக் கூட்டணி (எம்டிஏ) அரசாங்கத்தில் இணைந்துள்ளது.

மாநிலத்தின் நலனுக்காக அதனை முன்னோக்கி கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக MDA க்கும் ஆதரவளிக்க விரும்புகிறோம்" என்று ஐந்து எம்எல்ஏக்கள் அந்த கடிதத்தில் கூறியுள்ளனர். காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைவரான லிங்டோ இந்த நடவடிக்கையை ஆதரித்தார்.

கூட்டணியில் இணைந்ததன் மூலம் காங்கிரஸ் பாஜகவின் கூட்டாளியாக மாறுவது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. நாகாலாந்து மற்றும் திரிபுராவுடன் மேகாலயாவில் 2023 பிப்ரவரிக்குள் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!