பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தி மையத்தை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை திறந்து வைக்கிறார்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ( கோப்பு படம் )
இரண்டாவது உலகளாவிய ரசாயன மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தி மையத்தை மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நாளை திறந்து வைக்கிறார். மத்திய ரசாயனங்கள், உரங்கள், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சர் பக்வந்த் குபா முன்னிலை வகிக்கிறார்.
இந்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்புடன் (ஃபிக்கி) இணைந்து, பிஜிட்டல் வடிவத்தில் (நேரடி மற்றும் காணொலி) இந்த நிகழ்வை ஏற்பாடு செய்கிறது.
உலகளாவிய ரசாயன மற்றும் பெட்ரோ-ரசாயன உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதை இந்த முன்முயற்சி நோக்கமாக கொண்டுள்ளது. இந்த உச்சிமாநாடு, இந்திய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையின் உண்மையான திறனை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.
பெருந்தொற்றுக்கு பிறகு உலகளவில் முதலீடு செய்வதற்கான விருப்பமான இடமாக இந்தியா பெரியளவில் கருதப்படுகிறது. உலகளாவிய ரசாயன மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தி மையத்தின் இந்த பதிப்பு இந்தியப் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்த முக்கிய துறை குறித்த சிறந்த கண்ணோட்டத்தை வழங்குவதோடு முதலீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கான தளமாக இருக்கும்.
தொடர்புகள் மற்றும் கூட்டணிகளை உருவாக்குதல், முதலீட்டு பிராந்தியங்களில் பிரிவுவாரியான முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல், பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான அதிக சாத்தியங்களை வழங்குதல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu