/* */

வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது

Cylinder Gas Price Today -வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.115.5 குறைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது
X

வர்த்தக எரிவாயு சிலிண்டர்

Cylinder Gas Price Today -வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதம் ஒருமுறையும், விமான எரிபொருள் விலை 15 நாள்களுக்கு ஒருமுறையும் சர்வதேச விலைக்கு ஏற்ப மாற்றப்படுகிறது. அதன்படி வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் (19 கிலோ) விலை ரூ.115.5 குறைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் விமான எரிபொருள் விலை 4.2 சதவீதம் உயர்ந்துள்ளது. சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டர் ரூ.4,842.37 உயர்ந்து, ரூ.120,362.64-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் விமான எரிபொருள் விலை 4.5 சதவீதம் குறைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 4.2 சதவீதம் உயர்ந்துள்ளது. வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,859.50 -இல் இருந்து ரூ.1,744-ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இப்போது வரை வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 7-ஆவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டிலும் இந்த விலை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 5 மாதங்களில் வர்த்தக சமையல் எரிவாயு விலை ரூ.610 வரை குறைந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.1,053 என்ற விலையிலேயே தொடர்கிறது.

சர்வதேச விலையைவிட வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைவாகவே இந்தியாவில் விற்கப்படுவதால், அதன் விலை குறைக்கப்படவில்லை.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 Nov 2022 5:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  3. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  5. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  7. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  8. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  9. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பிறக்காத பிள்ளையின் அழகு கவிதைகள்..!