பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க காணொலி மாநாடு: தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்பாடு

பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க காணொலி மாநாடு: தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்பாடு
X

பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான கொழும்பு பாதுகாப்பு காணொலி மாநாடு இன்று இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியா, மாலத்தீவு, மொரிஷியஸ், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் காணொலி மாநாட்டில் பங்கேற்றனர்.

மாலத்தீவில் 9-10 மார்ச் 2022-ல் நடைபெற்ற 5-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளவிலான கூட்டத்தில் உறுப்பு நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட 2022-23-க்கான ஒத்துழைப்பு மற்றும் செயல்பாடுகளுக்கான செயல்திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட ஈடுபாடு நடவடிக்கைகளில் இந்த மாநாடு ஒன்றாகும்.

அந்தந்த நாடுகளில் உள்ள பயங்கரவாதம் தொடர்பான பல்வேறு சவால்கள் குறித்து பங்கேற்பாளர்கள் விவாதித்ததோடு பயங்கரவாத வழக்குகள், வெளிநாட்டு போராளிகளை கையாள்வதற்கான உத்திகள் மற்றும் இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் தவறான பயன்பாட்டை எதிர்கொள்வதற்கான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை திறம்பட விசாரணை செய்வதற்கு கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் அவசியத்தை குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கான குறிப்பிட்ட பகுதிகளை அடையாளம் காண கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் கீழ் பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர்.

Tags

Next Story