/* */

கோவை டூ சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை அட்டவணை: புறப்பாடு, வருகை விவரம்

கோவை டூ சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையில் இந்த ரயில் புறப்பாடு, வருகை விவரம் பற்றிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோவை டூ சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை அட்டவணை: புறப்பாடு, வருகை விவரம்
X

வந்தே பாரத் ரயில்  (கோப்பு படம்).

கோவை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை திட்டத்தின் கால நேர அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.


வந்தே பாரத் ரயில்

பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாட்டின் பல்வேறு நகரங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. இதுவரை 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டிற்கு சென்னை - மைசூரு இடையில் ரயில் சேவை கிடைத்துள்ளது. இந்த ரயில் காட்பாடி, கே.எஸ்.ஆர் பெங்களூரு ஆகிய இரண்டே நிறுத்தங்களில் மட்டும் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும்.


கோவை டூ சென்னை

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது ரயில் சேவையாக சென்னை மற்றும் கோவைக்கு இடையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக சென்னை வரும் பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ஆம் தேதி கொடியசைத்து ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் சேவையின் நேர அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

3நிறுத்தங்கள்

அதில், சென்னை மற்றும் கோவைக்கு இடையில் திருப்பூர், ஈரோடு, சேலம் என மூன்று நிறுத்தங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மொத்தம் 495.28 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 10 நிமிடங்களில் ரயில் கடக்கும். அதிகபட்ச வேகம் மணிக்கு 80.31 கிலோமீட்டர் ஆகும். இந்த ரயில் வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கும். தினமும் கோவையில் காலை 6 மணிக்கு புறப்படுகிறது.

கால அட்டவணை

கோவை டூ சென்னை- ரயில் நிலையங்கள்- சென்னை டூ கோவை

6.00 (புறப்பாடு) - கோயம்புத்தூர்- 20.30 (வருகை)

6.30/6.40 திருப்பூர் 19.43/19.45

7.17/7.20 ஈரோடு 19.02/19.05

8.08/8.10 சேலம் 18.03/18.05

12.10 (வருகை) சென்னை 14.20 (புறப்பாடு)

வரும் செல்லும் நேர விவரம்

திருப்பூருக்கு 6.30க்கு வருகை புரிந்து 6.40 மணிக்கு புறப்படுகிறது. இதையடுத்து ஈரோட்டிற்கு 7.17 மணிக்கு வந்தடைந்து 7.20 மணிக்கு புறப்படும். சேலத்திற்கு 8.08க்கு வந்து 8.10 மணிக்கு புறப்படும். இறுதியாக சென்னைக்கு 12.10 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுகிறது. சேலத்திற்கு 6.03 மணிக்கு வந்து 6.05க்கு புறப்படும்.ஈரோட்டிற்கு 7.02க்கு வந்து 7.05 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு 7.43 மணிக்கு வந்து 7.45க்கு புறப்படும். இறுதியாக கோவைக்கு இரவு 8.30 மணிக்கு சென்றடையும்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்குறிப்பிட்டவை தோராயமான நேர அட்டவணையே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்ததும் சிறிய அளவில் மாற்றங்கள் வரலாம்.இல்லையெனில் இந்த அட்டவணையின் படியே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கலாம் எனத் தெரிகிறது.


விமானத்தை போல் வசதிகள்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இந்தியாவின் முதல் என்ஜின் இல்லா ரயில் ஆகும். மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது. தானியங்கி கதவுகள், உள்ளிழுக்கும் படிக்கட்டுகள் கொண்டவை. மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 2 பெட்டிகள் மட்டும் எக்ஸிக்யூடிவ் ஆகும். எஞ்சியவை எகானாமிக் வகையை சேர்ந்தவை. உயர்தர குஷன் சீட்கள், 360 டிகிரி சுழலும் இருக்கைகள், சி.சி.டி.வி. கேமரா வசதி, ரயில் ஓட்டுநரை நேரடியாக தொடர்பு கொள்ள மைக், நவீன கழிவறை, ஏ.சி. வசதி, வைஃபை, ஜி.பி.எஸ், எல்.சி.டி திரைகள், தனி நபர் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Updated On: 24 March 2023 11:28 AM GMT

Related News