கொச்சியில் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து விபத்து
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்
ள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சோதனையின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அவசரமாக தரையிறக்கப்பட்டதில் ஹெலிகாப்டர் ஓடுபாதைக்கு வெளியே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளதகாவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொச்சியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகாப்டர் 25 அடி உயரத்தில் இருந்தபோது கட்டாயமாக தரையிறங்க வேண்டியிருந்தது. ALH துருவ் கடற்படையின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு இந்திய கடலோர காவல்படை செயல்பட்டு வருகிறது.
"இந்திய கடலோர காவல்படையின் ஏஎல்எச் துருவ் மார்க் 3 ஹெலிகாப்டர் இன்று கொச்சியில் படையின் விமானிகள் ஹெலிகாப்டரை சோதனை செய்து கொண்டிருந்தபோது கட்டாயமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நடந்தது. கட்டாயமாக தரையிறங்க வேண்டிய போது ஹெலிகாப்டர் சுமார் 25 அடி உயரத்தில் இருந்தது. ALH துருவ் கடற்படையின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு இந்திய கடலோர காவல்படை செயல்பட்டு வருகிறது" என்று இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
பயிற்சிப் பயணத்தின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் நெடும்பாசேரி விமான நிலைய ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரம் சேவைகள் பாதிக்கப்படும். இதையடுத்து, கொச்சியில் தரையிறங்க வேண்டிய மூன்று சர்வதேச விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
மஸ்கட் - கொச்சி விமானம் திருவனந்தபுரத்திற்கும், அகமதாபாத் - கொச்சி விமானம் கோவைக்கும், புவனேஸ்வர் - கொச்சி விமானம் பெங்களூருக்கும் திருப்பி விடப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கடலோர காவல்படை அதிகாரிகள் இதுவரை பதில் அளிக்கவில்லை. இதற்கிடையில், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக முதல் தகவல் வெளியானது. புறப்பட முற்பட்ட போது ஓடுபாதையின் ஓரங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu