அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பு: 5 பேர் உயிரிழந்தனர்

அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பு: 5 பேர் உயிரிழந்தனர்
X
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகை அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மேக வெடிப்பில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு அருகே ஏற்பட்ட மேக வெடிப்பைத் தொடர்ந்து குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர். மாலை 5:30 மணியளவில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக குகை சன்னதிக்கு அருகில் தண்ணீர் அதிக அளவில் பெருக்கெடுத்தது. .

பலத்த மழைக்குப் பிறகு, குகையின் மேல் மற்றும் பக்கங்களில் இருந்து திடீரென நீர் அலை காரணமாக மூன்று கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல கூடாரங்களும் சேதமடைந்துள்ளன. பொதுவாக ஒரு கூடாரத்தில் குறைந்தது 4-6 பேர் தங்கியிருப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை (ITBP), தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் பிற அமைப்புகளின் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிலைமையை ஆய்வு செய்து, பல்வேறு அமைப்புகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன என்றார். மக்களின் உயிரைக் காப்பதே எங்கள் முன்னுரிமை. பக்தர்கள் அனைவரும் நலம் பெற வாழ்த்துகிறேன் என்று அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai based agriculture in india