5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை: சுகாதார சேவைகள் இயக்குனரகம்!
நாட்டில் கொரோனா 2ம் அலை அதிகரித்து வந்ததை அடுத்து ஊடரங்கு உத்தரவிடப்பட்டது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் தளர்புகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
வெளியே செல்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி குழந்தைகளுக்கும் பெற்றோர், மாஸ்க் அணிகின்றனர். இந்தநிலையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
அதில், 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டும் என்கிற அவசியம் கிடையாது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பெற்றோர் மற்றும் டாக்டர்கள் கண்காணிப்பில் முக கவசம் அணியலாம்.
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. தேவைப்பட்டால் எச்ஆர்டிசி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu