திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது குழந்தையின் சித்தப்பா ஆட்டோவில் அழைத்துச் சென்றது தெரியவந்தது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு
X

திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த மீனா, சந்திரசேகர் தம்பதியினர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு வந்திருந்தார். தொடர் விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் திருமலையில் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்தனர்

நேற்று இரவு தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் சென்னை செல்வதற்காக பேருந்து நிலையம் வந்தனர். சென்னை செல்ல பேருந்து இல்லாத காரணத்தால் பேருந்து நிலையத்தில் களைப்பில் தூங்கியுள்ளர். அதிகாலை 2 மணிக்கு சந்திரசேகர், திடீரென விழித்து பார்க்கையில் அருகில் படுத்து கொண்டிருந்த சந்திரசேகரின் 2 வயது மகன் அருள்முருகனை காணவில்லை. இதனால் பதறிய அவர்கள் பேருந்து நிலையம் முழுவதும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இதுகுறித்து திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் சோதனை செய்ததில் மர்ம நபர் ஒருவர் சிறுவனை தூக்கி கொண்டு நடந்து செல்வது பதிவாகி இருந்தது.

அந்த காட்சிகளை வைத்து காவல்துறையினர் கடத்தல் நபர் குறித்து விசாரணை செய்து வந்தனர். அப்போது குழந்தையின் சித்தப்பா ஆட்டோவில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. காவல்துறையினர் தேடுவதை அறிந்த குழந்தையின் சித்தப்பா சுதாகர், குழந்தையை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

குழந்தையை கடத்தியது சித்தப்பாவா அல்லது வேறு யாராவதா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Oct 2023 4:59 AM GMT

Related News

Latest News

 1. சேலம்
  சேலத்திலிருந்து சென்னைக்கு புயல் நிவாரணப் பொருட்கள்
 2. தமிழ்நாடு
  வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
 3. சினிமா
  சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு
 4. தமிழ்நாடு
  வெள்ள நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள்
 5. சோழவந்தான்
  சோழவந்தான் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுவினர் அஞ்சலி
 6. குமாரபாளையம்
  பிளஸ் டூ மாணவர்களே! உங்கள் வாய்ப்புக்கு முந்துங்கள்...!
 7. ஈரோடு
  விஜயமங்கலம் சோதனைச்சாவடி அருகே புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது
 8. ஈரோடு
  ஈரோட்டிலிருந்து சென்னைக்கு புயல் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த...
 9. வணிகம்
  Business News In Tamil 2030-ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ...
 10. திண்டுக்கல்
  நத்தம் மின்வாரிய அலுவலக வாசலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்