தெலங்கானா ஆளுநரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்

தெலங்கானா ஆளுநரை மருத்துவமனையில் சந்தித்து  நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
X

தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன்

தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இது குறித்து சமூக வலைதளங்களில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவு:

சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநராகவும் பணியாற்றிய ஈ.எஸ்.எல்.நரசிம்மன் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தியறிந்ததும், நேரில் சென்று நலம் விசாரித்தேன். அவர் விரைவில் நலம்பெற்றுத் தனது பணிகளைத் தொடர விழைகிறேன்

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!