பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார் தமிழக முதல்வர்

பிரதமர்  நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார் தமிழக முதல்வர்
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.3.2022) புதுடில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுவை தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.3.2022) புதுடில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் பயணமாக நேற்றிரவு டெல்லி சென்றார். இன்று பிற்பகல் முதல்வர் ஸ்டாலின், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது தமிழகம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க கூடாது. உக்ரைனில் இருந்து மருத்துவப் படிப்பை பாதியில் விட்டுவந்துள்ள மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நரிக்குறவர், குருவிக்காரர்கள் சமூகங்களை பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும். பாக் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார்.

Tags

Next Story