முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுகிறார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுகிறார்
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுகிறார், அப்போது நீட் தேர்வு விவகாரம், மேதாது அணை விவகாரம், தொடர்பாக பேசுவார் என தெரிகிறது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு இரண்டாவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் 17ம் தேதி டெல்லி சென்றார். பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இரண்டாவது முறையாக நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார். இன்று மதியம் 12.45 மணி அளவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் எம்பிக்கள் கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோர் செல்கின்றனர்.


இந்த சந்திப்பில் நீட் தேர்வு குறித்தும், மேதாது அணை விவகாரம் குறித்தும், தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான கொரோனா தடுப்பூசி தரக்கோருவது குறித்தும் பேசுவார் என்று தெரிகிறது.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதிவியேற்றப் பின் முதல் முறையாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் என்பது குறிப்பிட தக்கது.

மேலும் அடுத்த மாதம் 7ம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவுநாள் வருகிறது. இதனையொட்டி தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி திருவுருவ படம் திறக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!