இன்ஸ்டாகிராம், ட்விட்டரை பின்னுக்குத்தள்ளி 10 கோடி பயனாளர்களை பெற்று ChatGPT சாதனை

இன்ஸ்டாகிராம், ட்விட்டரை பின்னுக்குத்தள்ளி 10 கோடி பயனாளர்களை பெற்று ChatGPT  சாதனை
X

பைல் படம்.

ChatGPT எனப்படும் பிரபல செயற்கை நுண்ணறிவு செயலி, அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களில், 10 கோடி பயனர்களை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால், சாட்ஜிபிடி(ChatGPT) எனப்படும் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு நாளுக்கு நாள் பிரபலமாகி வரும் நிலையில், பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.


சிமிலர்வெப் எனும் நுண்ணறிவு தளத்தின் அறிக்கையின்படி, சாட்ஜிபிடி, ஜனவரி மாதத்தில் ஒரு நாளைக்கு 1.3 கோடி பயனர்களைப் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட செயலிகள், 10 கோடி பயனர்களைப் பெற இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொண்ட நிலையில், சாட்ஜிபிடி அறிமுகமான இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களைப் பெற்றுள்ளது. இதேபோல் கடந்த வாரத்தில் chat.openai.com என்ற இணையதளம், தினசரி 2.5 கோடி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.


சாட்ஜிபிடி-ன் வளர்ச்சி, கூகுள் உள்ளிட்ட இணைய ஜாம்பவான்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவின் திறன்கள் பற்றியும், உலகம் அவற்றை பயன்படுத்த காட்டும் ஆர்வம் பற்றியும் அவ்வப்போது குறிப்பிட்டு வருகிறார். சீனாவின் Baidu என்ற இணையதள நிறுவனமும், தனது சொந்த ChatGPT விரைவில் உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

OpenAI சமீபத்தில் ChatGPT-ன் பிளஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த மாடலின்மூலம், பயனர்கள் அதிக நேரம் அதன் சேவைகளைப் பெற முடியும். மேலும், இந்த பிளஸ் மாடலில் புதிய அம்சங்களை பயன்படுத்துவதற்கான முன்னுரிமையை, பயனர்கள் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!