இந்தியாவை 'பாரத்' ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும்?

'பாரதத்தின் ஜனாதிபதி' என்ற பெயரில் வெளியிடப்பட்ட G20 விருந்து அழைப்பிற்குப் பிறகு இந்த பிரச்னை அரங்கத்துக்கு வந்துள்ளது. அரசாங்கம் இந்தியா என்கிற பெயரை விட்டுவிட்டு பாரதம் என்கிற பெயரை கொண்டுவர திட்டமிட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி, நாட்டின் பெயர் பற்றிய பெரும் விவாதத்துக்கு தூண்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரிவு 1ல் குறிப்பிடப்பட்டுள்ள 'இந்தியா, என்பதுவே பாரதம்' என்பது விளக்கமாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.. இரண்டையும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்த முடியாது. மேலும் இந்தியக் குடியரசில் இருந்து பெயரை மாற்றினால் பல திருத்தங்கள் தேவைப்படும்
'பாரதத்தின் ஜனாதிபதி' என்ற பெயரில் வெளியிடப்பட்ட G20 விருந்து அழைப்பிற்குப் பிறகே இந்த விவாதம் நாடுமுழுவதும் பரவி வருகிறது. மத்திய அரசு இந்தியா என்கிற பெயரை கைவிட்டு பாரதம் என்று மாற்ற திட்டமிட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்போதைய பெயரின் நிலைப்பாட்டில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் அரசியலமைப்பை திருத்த வேண்டும். பிரிவு 1 (மாற்றப்பட வேண்டும்) பின்னர் மற்ற அனைத்து பிரிவுகளிலும் அது சார்ந்த மாற்றங்களை கொண்டுவரவேண்டும்.
இந்தியா என்ற பெயர் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறதோ, அங்கு அவற்றை மாற்ற வேண்டும்.
நாட்டிற்கு ஒரே ஒரு பெயரை மட்டுமே வைத்திருக்க முடியும். இரண்டு பெயர்களை ஒன்றுக்கொன்று மாற்ற முடியாது, அது இந்தியாவில் மட்டுமல்ல, வெளியிலும் நிறைய குழப்பங்களை உருவாக்கும்
ஐ.நா.வில் இந்தியாவின் பெயர் இந்திய குடியரசு என்று இருப்பதை, நாளை பாரதக் குடியரசு என்று மாற்றி எழுத வேண்டும். அதற்கு முதலில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் "எங்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளது" என தெரிவிக்க வேண்டும்.
அந்த மாற்றத்தை அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் இந்தியாவின் பெயர் இந்தியா மட்டுமே. பிரிவு 1 இல் எழுதப்பட்ட பாரதம் என்பது விளக்கமாக மட்டுமே உள்ளது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று மாறக்கூடியவை அல்ல. இவ்வாறு இரட்டைப்பெயரைப் பயன்படுத்துவது நாட்டையே உருக்குலைப்பதாக இருக்கும். ஒரு நாட்டிற்கு ஒரே ஒரு பெயர் மட்டுமே இருக்க வேண்டும்.
செப்டம்பர் 18-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத் தொடரில் பெயர் மாற்றப் பிரச்சினை வரலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், பல எதிர்க்கட்சித் தலைவர்கள் “இந்தியா, அதுவே பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்று கூறும் பிரிவு 1, நாட்டின் குடியரசு தலைவரை "இந்திய குடியரசு தலைவர்" என்றுதான் குறிப்பிடுகிறது என கூறினர். நிச்சயம் இந்த பெயர் மாற்றப் பிரச்னை நாடாளுமன்றத்தில் அமளியை கிளப்பும் என்பது மட்டும் உறுதி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu