மனைவி குறித்த விமர்சனத்தால் கதறி அழுத சந்திரபாபு நாயுடு: என்ன நடந்தது?

மனைவி குறித்த விமர்சனத்தால் கதறி அழுத சந்திரபாபு நாயுடு: என்ன நடந்தது?
X

செய்தியாளர் சந்திப்பில் கதறி அழுத சந்திரபாபு நாயுடு. 

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தனது மனைவியை அவமதித்து பேசியது குறித்து பேட்டி அளிக்கும் போது, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குலுங்கி அழுதார்.

தற்போது ஆந்திர சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. அவையில் பேசிய ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், சந்திரபாபு நாயுடுவின் மனைவி குறித்து சில சர்ச்சை கருத்துகளை தெரிவித்தனர். இதற்கு தெலுங்கு தேசம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் பின்னர், அவையில் நடந்த சம்பவம் குறித்து, அமராவதியில் பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு, மனைவி மீதான விமர்சனம் பற்றி பேசுகையில் குலுங்கி அழுதார். சந்திரபாபு நாயுடு கூறியதாவது: எனது 40 ஆண்டு அரசியல் வாழ்க்கையில், இன்றைய நாளை போல் வருத்தப்பட்டது இல்லை. நான் பல போராட்டங்களைப் பார்த்திருக்கிறேன்; ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறேன்.

நான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரி, என் மனைவி நான் அரசியலில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்தி வந்துள்ளார். ஆனால், எப்போதும் அரசியலுக்குள் வந்ததில்லை. இதுவரை அவர் என்னை அவமானப்படுத்தியதில்லை. எதிர்க்கட்சியாக இருந்த போதும் ஆளும் கட்சியாக இருந்த போதும், இப்போது போல் தரக்குறைவாக நடந்ததை பார்த்ததில்லை என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!