நாடாளுமன்ற புதிய கட்டட திறப்புவிழா: ரூ.75 நினைவு நாணயம் வெளியீடு

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்புவிழா: ரூ.75 நினைவு நாணயம் வெளியீடு
X

நாடாளுமன்ற புதியநாணயம்  கட்டட திறப்பு விழாவையொட்டி மத்திய அரசு வெளியிடும் ரூ. 75 

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவை முன்னிட்டு ரூ.75 நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவையொட்டி, மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் 75 ரூபாய் மதிப்பிலான நாணயம் வெளியிடப்படும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, 75 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட உள்ளதாக, மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. மே 25 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், நாணயம் (Issue Of Commemorative Coin on the occasion of Inauguration of New Parliament Building) விதிகள், 2023 இன் கீழ் நாணயம் வெளியிடப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் போது, மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வெளியிடுவதற்காக, நாணயச்சாலையில் வெளியிடப்படும்,'' என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாணயத்தின் விட்டம் 44 மிமீ மற்றும் அது 200 செர்ஷன்களைக் கொண்டிருக்கும். நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் ஆகியவற்றால் உருவாக்கப்படும். நாணயத்தின் ஒரு புறத்தில் சிங்க இலச்சினை இருக்கும், அதன் அடியில் 'சத்யமேவ் ஜெயதே' என ஹிந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும், இடது சுற்றளவில் 'பாரத்' என்று தேவநாக்ரி எழுத்துக்களிலும், வலது சுற்றளவில் ஆங்கிலத்தில் 'இந்தியா' என்ற வார்த்தையும் இடம் பெற்றிருக்கும். சர்வதேச எண்களில் ரூபாயின் மதிப்பான 75 என்ற எண் இடம்பெற்றிருக்கும்" என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியால் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 20 எதிர்க்கட்சிகள் நிகழ்வை புறக்கணிக்க முடிவு செய்திருந்தாலும் 25 கட்சிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

பாஜக உட்பட ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) 18 உறுப்பினர்களைத் தவிர, ஏழு NDA அல்லாத கட்சிகள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள். .

Tags

Next Story