அனைத்து மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்துங்கள் -மத்திய சுகாதாரத்துறை
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள், தேசிய சுகாதார இயக்கத்தின் மேலாண்மை இயக்குனர்கள் ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.
அனைத்து மாவட்டங்களிலும் பிடி-பிசிஆர் பரிசோதனைக் கருவி இருப்பை உறுதி செய்யுங்கள், அனைத்து மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்துங்கள் - மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
ஒமிக்ரான் தொற்று உருவாகி இருப்பது மற்றும் தடுப்பூசியில் முன்னேற்றம் குறித்தும் கோவிட்-19 பொது சுகாதார நிலைமை பற்றியும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆய்வு செய்தது.
கோவிட்-19 ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்றினை தடுக்க, பொது சுகாதார பணிகளை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று ஆய்வு செய்தார்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள், தேசிய சுகாதார இயக்கத்தின் மேலாண்மை இயக்குனர்கள் ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஐசிஎம்ஆர் தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவிட் தடுப்புக்குரிய நடைமுறைகள், பரிசோதனை, தொடர்பு கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி, ஆகிய 5 முனை உத்தியைப் பயன்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
நோய் தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை சிகிச்சைக்காக சந்தேகப்படும் நோயாளிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு பரிசோதனைகளை விரிவுபடுத்தவும், கண்காணிப்பை உறுதிப்படுத்தவும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வலியுறுத்தப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் பிடி-பிசிஆர் பரிசோதனைக் கருவி இருப்பை உறுதி செய்யுமாறு அவை அறிவுறுத்தப்பட்டன.
நோயாளிகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் சமாளிப்பதற்கு ஏற்ப அனைத்து மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
தடுப்பூசி குறித்த வதந்திகளைக் களையவும், தடுப்பூசி குறித்த தயக்கத்தைப் போக்கவும் தொடர்ச்சியான செய்தியாளர் சந்திப்பின் மூலம் சான்றாதார தகவல் விழிப்புணர்வு முகாம் நடத்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu