ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மத்திய அரசு கால அவகாசம்

ஓட்டுநர் உரிமம்  புதுப்பித்தல் மத்திய அரசு கால அவகாசம்
X

கொரோனா பொதுமுடக்கத்தின்போது போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டிருந்ததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகன அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல் போன்ற பணிகளை செய்ய முடியாமல் தவித்து வந்ததையடுத்து தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதிலிருந்து நான்காவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல்வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள் ஜூன் 30-ஆம் தேதி வரை செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அதில், வரும் 31-ஆம் தேதி முடிவடையுள்ள மற்றும் கடந்த ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதியுடன் முடிந்த, வாகனங்களுக்கான அனுமதி, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு ஆகியவற்றுக்கு ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கும் படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil